மின்சாரக் கட்டண உயர்வு குறித்து சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து அண்மைய நாட்களில் உள்நாட்டு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து சுவிஸ் சமஷ்டி பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2023 ஆண்டில் வீடுகளின் மின்சாரக் கட்டணங்கள் வெகுவாக உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த ஆண்டில் சராசரியாக மின்சாரக் கட்டணங்கள் 27 வீதமாக உயர்வடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், மின்சாரக் கட்டணங்கள் சில பகுதிகளில் பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
