சுவிற்சர்லாந்தின் ஊரி கன்டோனில் ஆடுகளுடன் பாலியல் உறவு வைத்த நபர்.!! சுவிற்சர்லாந்தின் ஊரி கன்டோனில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. செம்மறி ஆட்டுத்தொழுவத்தில் இருந்த ஆடுகள் பலவற்றை ஒரு மர்ம நபர் தொடர்ச்சியாக பாலியல் வற்புணர்வுக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் மேலும் தெரியவருகையில் :- ஊரி கன்டோனில் உள்ள Schattdorf எனற பகுதியில் உள்ள செம்மறி ஆட்டுத்தொழுவத்தில் ஒரு மர்ம நபர் அதிகாலை வேளையில் அங்கு வந்து யாருக்கும் தெரியாமல் ஆடுகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளார்.
ஆடுகளுடன் பாலியல் உறவு வைத்த நப
இச்சம்பவம் ஒரு வாரம் கழித்து உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. எனவே போலீசாரின் உதவியுடன் குற்றவாளி கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் பற்றி செம்மறி ஆடுகளின் உரிமையாளர் சுவிற்சர்லாந்தின் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் :-
ஆடுகளை பராமரிக்கும் போது காலை ஒரு நாள் காலை ஒரு செல்போன் ஒன்றை கண்டெடுத்ததாக குறிப்பிட்டார். குறித்த செல்போன் ஆட்டுச்சாணத்தில் புதைந்து இருந்துள்ளது. யாராவது தவறுதலாக விட்டு சென்றிருப்பார்கள், தேடி வரும்போது கொடுக்கலாம் என எண்ணியிருந்தென். ஆனால் ஒரு வாரம கழித்து மீண்டும்; இன்னுமொரு செல்போன் கண்டெடுக்கப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும் தான் ஆடுகளை பார்வையிட காலை வேளையில் செல்லும் போது தனது ஆடுகள் பதட்டத்துடன் காணப்பட்டதாகவும்.. செல்போன் விடயம் தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு வேறு எந்த தடயங்களையோ குற்றவாளிகளையோ காணாத நிலையில் உடனடியாக விரைந்து அன்றைய நாளே சி.சி.டி.வி காமராக்களை ஆட்டுத்தொழுவத்தில் பொருத்தியுள்ளார்கள்.
ஆடுகளுடன் பாலியல் உறவு வைத்த நப
கமராக்கள் பொருத்திய மறுநாள் அதிகாலை 5 மணி அளவில் குறித்த நபர் மீண்டும் செம்மறி ஆடுகளுடன் உடலுறவு வைப்பதற்காக வந்துள்ளார். இதை அவதானித்த போலீசார் அவரை கைது செய்துள்ளார்கள். மேலும் அவர் பாலியல் உறவு வைத்த செம்மறி ஆடுகள் வெறும் 4 மாதங்களே ஆனவை என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆடுகள் பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு உள்ளாவில்லை என்றாலும், இரண்டு ஆடுகளில் காயங்கள் இருப்பதை கால்நடை மருத்துவர் கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆடுகளுடன் உறவு வைத்துக்கொண்ட குறித்த நபர் இவ்வாறான சீர்கேடுகளை பல வருடங்களாக மேற்கொண்டு வந்திருந்தமை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
40 வயதான குறித்த நபர் இதற்கு முன்னரும் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆடுகளின் உரிமையாளர் இது பற்றி ஊடகங்களுக்கு குறிப்பிடுகையில் “செம்மறி ஆடு வைத்திருக்கும் 30 வருடங்களில் இப்படி ஒரு அனுபவத்தை நான் பார்த்ததே இல்லை” எனவும் இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் பற்றி வழக்கறிஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் இப்படியான குற்றத்தை செய்த குற்றவாளிக்கு விலங்குகள் கொடுமை அத்துமீறல் மற்றும் சொத்து சேதம் பற்றிய மூன்று குற்றங்களுக்கும் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கொடுக்க முடியும் என குறிப்பிட்டார்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.