சுவிட்சர்லாந்து முழுவதிலும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் இந்த தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க தொடங்கியுள்ளது.
சில காண்டங்களில் பறவை காய்ச்சல் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பாக சூரிச் கார்டனின் இருவேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் பறவை காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று பரவுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதுஃ
பறவை காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் பண்ணைகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோழிகள் வாத்துகள் போன்ற பறவைகள் தனித்தனியாக வளர்க்கப்பட வேண்டும் எனவும் ஒன்றாக இணைத்து வளர்க்கப்பட கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பறவை காய்ச்சல் வைரஸ் மிக அபூர்வமாகவே மனிதர்களுக்கு பரவும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எனினும் இறந்த பறவைகளை கைகளில் தொடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கூறப்பட்டுள்ளது.
Source:- TamiLSwiss