சுவிட்சர்லாந்து மக்களின் கொள்வனவு இயலுமையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2023ம் ஆண்டில் சுவிஸ் நிறுவனங்கள் சம்பளங்களை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளன.
குறிப்பிடத்தக்களவு சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், மக்களின் கொள்வனவு இயலுமை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறைந்தபட்சம் 2.2 வீதத்தினால் சம்பளங்களை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் கூடுதல் சம்பளம் அதிகரிப்பு செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் பணவீக்கத்தை கருத்திற்கொண்டால் சம்பள அதிகரிப்பானது 1.8 வீதமேயாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளைப் போன்று சுவிட்சர்லாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சாத்தியங்கள் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.