சுவிட்சர்லாந்துக்கு வருகை தந்த கவிப்பேரரசு வைரமுத்து.!! தமிழ் சினிமாவில் கவிப்பேரசு என்றழைக்கப்படும் கவிஞர் வைரமுத்து சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பிரத்தியேக விஐயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஐரோப்பிவின் பல இடங்களுக்கு தனிப்பட்ட சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருந்த அவர்கள் அதன் ஒரு அங்கமாகவே சுவிஸ் நாட்டிற்கும் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சுவிஸ் நாட்டின் தமிழ் பற்றாளர், எழுத்தாளர், கவிஞர், இலக்கியஆர்வலர், தொழிலதிபர் என பன்முகங்களை கொண்ட கலாநிதி கல்லாறு சதீஸ் அவர்களின் அழைப்பின் பேரில், சுவிஸ் நாட்டில் வைரமுத்து அவர்கள் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.



குறித்த சந்திப்பில் தமிழ் எழுத்தாளர்கள், ஊடகவியளாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் கவிஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 26.06.24 அன்று புதன்கிழமை சூரிச் விமானநிலையத்தின் அருகில் அமைந்திருக்கும், ஈழத்தமிழரான சிறீகாந்தன் அவர்களால் நடாத்தப்படும் உணவத்தில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிற்பகல் 3:30 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சந்திப்பில், வைரமுத்துவின் வேண்டுதலின் பெயரில் தங்களையும் தங்கள் துறை மற்றும் கலை சார்ந்த படைப்புகளினதும் அறிமுகத்தை வழங்கியிருந்தனர்.
குறிப்பாக கவிஞர் பொலிகை ஜெயா மற்றும் விநாயகமூர்த்தி கந்தசாமி (VTS Finacne), எழுத்தாளர் சீத்தா அச்சரநாதன் போன்றோர் வைரமுத்துவிற்காக தமது கவிதைகளை வாசித்துக்காட்டி அவரை மகிழ்ச்சிப்படுத்தியிருந்தனர். மேலும் பல கலைஞர்கள் தங்களது படைப்புகள் பற்றி கூறியதோடு, வைரமுத்து அவர்கள் படைப்பாளிகளுக்கு தனது ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.
முக்கியமாக சுவிஸ் நாட்டைப்பற்றி அவர் குறிப்பிடும் போது ‘ எனக்கு இந்த நாட்டில் இயற்கையோடு சேர்த்து இந்த நாட்டின் சட்டஒழுங்குகள் மிகவும் பிடித்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும் புலம்பெயர் தமிழர்கள் முக்கியமாக தங்களது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அன்புக்கட்டளை விடுத்திருந்தார்.
சுரேஷ் செல்வரத்தினம் அவர்கள் சிறப்பு உரை ஆற்றும் போது வைரமுத்து அவர்கள் ஈழத்தமிழர்கள் மீது கொண்டுள்ள அளவுகடந்த பற்றையும் பாசத்தையும் அவரது உரையில் பறைசாற்றி சென்றிருந்தார்.
மேலும் குறித்த சந்திப்பில் இந்தியாவிலிருந்து தொழிலதிபர் திரு. வசந்தபவான் ரவி அவர்களும், பிரான்ஸிலிருந்து எழுத்தாளர் வாகைக் காட்டானும் சமுகமளித்திருந்தனர். இச்சந்திப்பில் கவிப்பேரசு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்தது.
இறுதியாக கலாநிதி கல்லாறு சதீஸ் அவர்கள் நன்றியுரை வழங்கியபோது வந்திருந்த ஒவ்வொருவரது பெயரையும் விழிந்து அவர்களைப்பற்றி குறிப்பிட்டு நன்றியுரை நிகழ்த்தியமை எல்லோரையும் நெகிழ வைத்திருந்தது.
இது தொடர்பான காணொளியை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.!!
CLICK HERE