சுவிட்சர்லாந்தில் Coop நிறுவனத்தின் அதிரடி : 1000 பொருட்கள் விலைக்குறைப்பு
ஸ்விட்சர்லாந்தில் உள்ள பிரபல சில்லறை விற்பனை நிறுவனமான கோப் (Coop), வாடிக்கையாளர்களுக்கு நேரடி நன்மை கிடைக்கும் வகையில், 1000-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
முந்தைய ஆண்டு முடிவில், மிக்ரோஸ் (Migros) நிறுவனம் தனது 1000 வகை தயாரிப்புகளில் விலைக் குறைப்பு ஏற்படுத்தப்போவதாக அறிவித்திருந்தது. அதையடுத்து தற்போது அதன் முக்கிய போட்டியாளரான கோப் நிறுவனமும் அதே போன்று நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
2025ஆம் ஆண்டில் இதுவரை, விலை குறைப்புகளுக்காக மட்டும் 5 கோடி சுவிஸ் ஃபிராங்குகளுக்கும் மேல் முதலீடு செய்திருப்பதாக கோப் நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அற்ப விலையில் உயர்தர பொருட்களை வழங்கும் நமது வாக்குறுதியை நாங்கள் தீவிரமாக கையாளுகிறோம் என்பதற்கான சான்றே இந்த விலை குறைப்புகள்,” என கோப்பின் மார்க்கெட்டிங் மற்றும் கொள்முதல் துறை தலைவர் ஆண்ட்ரியா கிராமர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் கூடுதலாக 30 புதிய பொருட்கள் ‘Prix Garantie’ எனும் குறைந்த விலை பொருட்கள் வரிசையில் சேர்க்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
சர்வதேச பொருளாதார அழுத்தங்களுக்கிடையில், சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் உணவுப் பொருட்கள் மற்றும் அன்றாட தேவைகள் தொடர்பான செலவுகளை குறைக்க கோப் எடுத்துள்ள இந்த முயற்சி, பொதுமக்களின் வரவேற்பை பெரிதும் பெற்றுள்ளது.
மேலும், இந்த விலை குறைப்பு, நிறுவனம் கொண்டாடும் ‘Prix Garantie’ பிராண்டின் 20ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு நிலையான மற்றும் நம்பகமான விலை உறுதியுடன் கூடிய பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
@Keystone SDA