சுவிட்சர்லாந்தில் புதிய வகை கோவிட் திரிபு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
பிஏ 2.86 என்ற புதிய வகை கோவிட் தொற்று குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த புதிய வகை கோவிட் தொற்று சுவிட்சர்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் கழிவு நீர் தொகுதியில் இந்த புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை கோவிட் திரிபு கண்டறியப்பட்ட உலகின் 5 நாடுகளில் சுவிட்சர்லாந்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
டென்மார்க், அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த வகையிலான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இந்த திரிபு தொடர்பில் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.