சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகளை குறைக்க களத்தில் இறங்கிய மக்கள்
2025 ஜூன் மாத ஆரம்பத்தில், சுவிட்சர்லாந்து வாடகையாளர் சங்கம் (ASLOCA) புதிய மக்கள் வினவல் (Initiative) ஒன்றுக்காக கையெழுத்து சேகரிப்பை தொடங்கியுள்ளது. இந்த முயற்சியின் நோக்கம் – “அதிகமாக வசூலிக்கப்படும் வீட்டு வாடகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்பதே.
சுவிட்சர்லாந்து வாடகையாளர் சங்கம் தொடர்ந்து வாதிட்டு வரும் விஷயம், சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகள் கட்டுப்பாடின்றி உயர்ந்திருப்பது. வீடு உரிமையாளர்கள், வீட்டின் செலவுகளைவிட மிக அதிகமாக வாடகையை வசூலித்து வருகிறார்கள். இது சமத்துவமற்ற நிலை மற்றும் பொதுமக்களுக்கு அதிக சுமையாக மாறியுள்ளது. எனவே அரசு தலையிட்டு, வீட்டு வாடகைகளை கட்டுப்படுத்த வேண்டுமென்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

சுவிட்சர்லாந்து வாடகையாளர் சங்கம் வெளியிட்ட கணிப்புப்படி, சுவிட்சர்லாந்தில் உள்ள வாடகையாளர்கள், ஆண்டுக்கு மொத்தமாக 10 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை அதிகமாக செலுத்தி வருகிறார்கள். இந்த தொகை, உண்மையான கட்டணத்தைக் காட்டிலும் மிக அதிகமானது என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் வீடு உரிமையாளர்கள் மற்றும் பஞ்சாயத்து சங்கங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர். அவர்கள் கூறுவதாவது: “சுவிட்சர்லாந்து வாடகையாளர் சங்கம்வெளியிட்டுள்ள கணக்குகள் முழுமையாக நம்பமுடியாத, புனையப்பட்ட எண்கள்” என்று கடுமையாக விமர்சிக்கின்றனர்.
இருப்பினும், வீட்டு வாடகைகளுக்கு எதிரான இந்த பிரசாரம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டு வருவதால், இது அரசியல் முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நகர்கிறது.
தற்போதைய சூழலில், மக்கள் தேவையை கருத்தில் கொண்டு, வாடகை கட்டுப்பாடுகள், அரசியல் விவாதத்திற்கு வரத் தொடங்கியுள்ளன. இது சுவிட்சர்லாந்தின் வீட்டு சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய முயற்சி என்றே கூறலாம்.