சுவிட்சர்லாந்தில் வீடு வாங்க இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சுவிட்சர்லாந்தில் வீடுகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. சில தசாப்த இடைவெளியின் பின்னர் முதல் தடவையாக வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் வீடு வாங்க இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
கடந்த மூன்று மாதங்களில் வீடுகளின் விலைகள் 0.2 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. தனிக் குடும்ப வீடு மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பு என்பனவற்றின் விலைகள் உச்சம் தொட்டு தற்பொழுது குறைவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முறையே 5.5 மற்றும் 5.2 வீதம் என்ற அடிப்படையில் தனி வீடுகளும், அடுக்கு மாடி வீடுகளும் விலை குறைவடைந்துள்ளது. பணவீக்கம் காரணமாக வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டதனால் வீடுகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.