சுவிட்சர்லாந்தில் வயோதிபர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி.!! சுவிட்சர்லாந்தில் ஓய்வூதியக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவையினால் ஓய்வூதிய அதிகரிப்பு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியக் கொடுப்பனவு தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு என்பன சிறியளவில் அதிகரிக்கப்பட உள்ளது. எதிர்வரும் 2023ம் ஆண்டில் இந்த கொடுப்பனவு அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்தில் வயோதிபர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி.!!
பணவீக்கம் மற்றும் அதிகளவான வாழ்க்கைச் செலவு என்பனவற்றினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2023ம் ஆண்டில் ஓய்வூதியக் கொடுப்பனவு 2.5 வீதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளது.
அடுத்த ஆண்டில் பணவீக்கம் சுமார் 3 வீதமாக காணப்படும் என மதிப்பீடு செய்பய்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.