சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களுக்கு போக்குவரத்து தொடர்பாக முக்கிய அறிவிப்பு..!! சுவிட்சர்லாந்தில் போக்குவரத்து நெரிசல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அநேகமான சுவிட்சர்லாந்து கான்டன்களில் இன்றைய தினம் பாடசாலை விடுமுறை ஆரம்பமாகின்றது.
பல்வேறு தரப்பினரும் விடுமுறைக்காக வெளியே செல்வதனால் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மலைப்பாங்கான ரிசார்ட்களை நோக்கி அதிக எண்ணிக்கையிலானவர்கள் பிரதான வீதிகளிலும் ஏனைய பாதைகள் வழியாகவும் படையெடுக்கத் தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களுக்கு போக்குவரத்து தொடர்பாக முக்கிய அறிவிப்பு..!!
A1, A2, A3, A9 மற்றும் A13, ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் நிலையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சூரிச், பேர்ன், பேசல், லூசர்ன் மற்றும் லுகானோ, கோதார்ட் சுரங்கத்தின் சில பகுதிகள், உள்ளிட்ட சில பாதைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.