சுவிட்சர்லாந்தில் மீண்டும் சஹாரா பாலைவனத்தின் தூசி சஹாரா பாலைவனத்தின் தூசி இன்று முதல் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பருவ மாற்றத்துடன்இ நாட்டின் சில பகுதிகளில் வானம் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்இ ஏனெனில் சஹாராவில் இருந்து தூசி சுவிட்சர்லாந்தை நோக்கி வீசப்படுகிறது. அதன் அதிக அடர்த்தியான தூசி, வலுவான ஆரஞ்சு நிறத்தில் தோற்றமளிக்கிறது.

அதே நேரத்தில், கோடையின் ஆரம்பம் சற்று முரண்பாடாக, குறைந்த வெப்பநிலையைக் கொண்டுவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வெள்ளிக்கிழமைக்குள் 20 பாகை செல்சியசாக ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.