சுவிட்சர்லாந்தில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை குறைந்துள்ளதால்இ தமது இலக்குகளை அடைய சுவிஸ் கார் தொழில்துறை போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கார் இறக்குமதியாளர்கள் தற்போது அரசாங்க ஆதரவைக் கேட்கிறார்கள்இ அதே நேரத்தில் மலிவான மின்சார கார்கள் விற்பனையை அதிகரிக்கும் என்று டீலர்கள் நம்புகிறார்கள்.

மின்சார கார்கள் குறைந்த விலை மற்றும் காபன் உமிழ்வுகளை வழங்காமை போன்ற நன்மைகளை கொண்டிருந்தாலும், அதிக விலை மற்றும் வரையறுக்கப்பட்ட சார்ஜிங் நிலையங்கள் காரணமாக பலர் மின்சார கார்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டிவருவதாக சுவிஸ் கார் இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிடப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் 3% கார்கள் மட்டுமே முழுமையாக மின்சாரத்தில் இயங்குகின்றன. மேலும் இந்த ஆண்டு விற்பனை 9.5% குறைந்துள்ளது.
எனினும் மலிவான மின்சார கார்கள் விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது