சுவிட்சர்லாந்தில் மாரடைப்பு தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்! “இதயம் ஒரு கோவில்” உங்களுக்காக மாரடைப்பு குறித்த ஒரு இலவச விழிப்புணர்வு நிகழ்வு.
நமது இதயம் ஒரு சாதாரண உறுப்பு அல்ல.
நம் உடலின் உறுப்புகளிற்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை வழங்குவதன் மூலம் அது நாம் உயிர் வாழ்வதற்கான முக்கியத்துவத்தைத் தருகிறது. எனவே, இந்தப் பொக்கிஷமான உறுப்பைப் பாதுகாப்பதும் இதயநோய்களில் இருந்து முற்பாதுகாப்புடன் வாழ்வதும் மிக முக்கியம்.
ஏன் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும்?
இந்த நிகழ்வு “ஆரோக்கியம்” என்ற அமைப்பின் மருத்துவ- உளவியல் நிபுணர்களால் நடாத்தப்படுகிறது. அவர்கள் மாரடைப்பு தொடர்பான சிக்கலான விடயங்களை உங்களுக்கு விளக்கமாக எடுத்துக்கூறுவார்கள்.
இதில் மருத்துவத் தகவல்களுடன் விரிவான விளக்கங்கள், மற்றும் உளவியல் விளைவுகள் ஆகியவற்றை இயல்பான முறையில் விரிவுரையாக்குவார்கள்.

உங்கள் தாய்மொழியில், உங்களுக்காக..
இந்த நிகழ்வு எம் தாய்மொழியாம் தமிழ் மொழியில் நடக்கிறது. இதன் மூலம் உங்களிற்கும் உங்கள சக குடும்பத்தினர் அனைவரிற்கும் உள்ளடக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.
நம் இதயத்தை “கோவிலாக” மதித்து அதை ஆரோக்கியமாகப பேணுவதைக் கற்றுக்கொள்ளவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம்!
நினைவில் கொள்ளுங்கள்
பங்கேற்பதற்காக 26 நவம்பர் 2024ற்கு முன்னதாகவே இந்த இணையத்தள முகவரியில் விண்ணப்பியுங்கள்: https://forms.gle/sf1zEeuXxeWuefB57
நுழைவு: இலவசம்
📅 வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024
⏰ மாலை 18:00 மணி முதல் – இரவு 21:45 மணிவரை
📍 சூரிச் பல்கலைக்கழகம், “Gummibärlisaal” (KOH-B-10, https://www.uniability.uzh.ch/static/info/KOH_B_10)
இந்த விழிப்புணர்வு வகுப்பில் எங்களுடன் இணையுங்கள்!
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகப் பேணுங்கள்!
நாங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காண ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
இங்ஙனம்,
ஆரோக்கியம் குழுவினர்