சுவிட்சர்லாந்தில் மாடுகளுக்கு விசேடமாக தயாரிக்கப்பட்ட கழிப்பறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் மாகாணம், ஹெல்புல் பகுதியில், மாடுகளுக்கு ஏற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய கழிவறை (Cow Toilet) அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு ஒரு பசுவுக்கான அமோனியா வாயு உமிழ்வை 15% குறைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, லூசெர்ன் விவசாயிகள் சங்கம், மத்திய சுவிட்சர்லாந்தின் விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அலுவலகங்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிறது.
மாடுகளுக்கு, 1 கிலோ உணவு கொடுக்கப்பட்டு தனித்தனி கழிவறைக்குள் அழைக்கப்படுகின்றன. அங்கு, பசுவின் இடுப்பு உள்ளிட்ட சில உடல் பாகங்கள் சிறுநீர் கழிக்கத் தூண்டப்படுகின்றன.

அவ்வாற வெளியேறும், அந்த சிறுநீர் ஒரு பாத்திரத்தில் சேகரிக்கப்படுவதுடன், அது குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. சேகரிக்கப்பட்ட சிறுநீர் பின்னர் உரமாக வேளாண் பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சிறுநீர் மற்றும் கழிவுகள் கலந்து விட்டால் அதிக அளவில் அமோனியா வாயு உருவாகும். இதைத் தடுக்கவே இந்த வகையான கழிவறை உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து ஏற்பாடுகளும் சேர்த்து ஒவ்வொரு பசுவினால் உமிழப்படும் அமோனியா வாயுவை 44% வரை குறைக்கும் திறனுடையதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.