சுவிட்சர்லாந்தில் போலி வேலை வாய்ப்புகள் தொடர்பில் மோசடிகள் இடம்பெற்ற வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேர்ன் கான்டனில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களின் வாயிலாக தொழில் வாய்ப்பு தருவதாக கூறி மக்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் இவ்வாறான பல போலி வேலை வாய்ப்பு மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பேர்ன் போலீசார் தெரிவிக்கின்றனர்.
வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் போன்ற செயலிகளின் ஊடாக மோசடிக்காரர்கள் தொடர்பு கொண்டு மக்களை ஏமாற்றுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நல்ல கொடுப்பனவுடன் தொழில் வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்து மக்களிடமிருந்து பணம் மோசடி செய்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பண்டங்கள் பற்றி எழுதுதல், பொருட்களை கொள்ளளவு செய்தல் அல்லது செயலிகளை பரீட்சித்தல் போன்ற பணிகளை மேற்கொள்வோருக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்கப்படும் எனக் கூறி ஏமாற்ற ப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறைந்த முயற்சியில் அதிக லாபம் ஈட்டும் வகையிலான கவர்ச்சிகரமான தொழில் வாய்ப்பு விளம்பரங்கள் தொடர்பில் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களில் சிக்கியவர்கள் முறைப்பாடு செய்யுமாறும் போலீசார் கோரியுள்ளனர்.