சுவிட்சர்லாந்தில் போலி தொலைபேசி மோசடிகள் 3 மடங்கு அதிகரிப்பு.!! சுவிற்சர்லாந்தில் அதிகாரிகளின் பெயரில் மோசடி செய்யும் தொலைபேசி அழைப்புக்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன என சைபர் செக்யூரிட்டிக்கான ஃபெடரல் அலுவலகத்தில் பதிவாகியுள்ளன.
2024ல் கிட்டத்தட்ட 22,000 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது என சுவிற்சர்லாந்து ஃபெடரல் ஆஃபீஸ் ஃபார் சைபர் செக்யூரிட்டி (FOCS) அதன் இணையதளத்தில் அறிவித்தது.
இது முன்னைய ஆண்டை விட சுமார் 14,800 அதிகம். பெரும்பாலும் தொலைபேசி மோசடிகள் போலீசார் என தங்களை அறிமுகப்படுத்தி மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறான மோசடிகளுக்கு வயதானவர்களே அதிகம் இலக்கு வைக்கப்படுகிறார்கள். பல வயதான தம்பதியர்கள் அல்லது தனியே வசிப்பவர்கள் பல்லாயிரக்கணக்காண பிராங்குகள் பணத்தை இழந்துள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது மாத்திரமின்றி சுவிட்சர்லாந்தில் ஆன்லைன் மோசடிகளும் பரவலாக இடம்பெற்று வருகின்றது. இது குறிப்பாக பண்டிகைக காலங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது.
மலிவு விற்பனை மற்றும் இலவச பரிசுப்பொருட்கள் போன்ற போலி விளம்பரங்கள் மூலமும் சுவிட்சர்லாந்தில் முக்கிய பிரபலமான பிராண்டுகளின் பெயர் மற்றும் அந்த நிறுவனத்தில் லோகோ போன்றவற்றை பயன்படுத்தியும் ஆன்லைன் மோசடிகள் இடம்பெறுகின்றன.
இது மாத்திரமின்றி போலியான QR குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு பெறுபவர்களிடம் மோசடி செய்பவர்கள் கடிதம் அனுப்புவதையும் மற்றும் வெளிப்புற வாகன தரிப்பிடங்களிலும் இவ்வாறான மேற்கொள்ளப்படுகிறது என ஃபெடரல் ஆஃபீஸ் ஃபார் சைபர் செக்யூரிட்டி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.