சுவிட்சர்லாந்தில் பியர் விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக அந்த காலப்பகுதியில் பியர் விற்பனை வீழ்ச்சி அடைந்திருந்தது.
எனினும் வெப்பத்துடனான காலநிலை கோவிட் கட்டுப்பாடு தளர்வு போன்ற ஏதுக்களினால் கடந்த ஆண்டு பியர் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2021- 22 ஆண்டுகள் அதாவது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான ஓராண்டு காலப்பகுதியில் பியர் விற்பனையானது அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளை விடவும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
சுவிஸில் ஓராண்டு 469 மில்லியன் லீற்றர் பியர் விற்பனை
மொத்தமாக இந்த காலப்பகுதியில் 364 மில்லியன் லிட்டர் உள்நாட்டு பியர் வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது ஒன்பது வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி செய்யப்பட்ட பியர் வகைகளின் விற்பனையையும் சேர்த்தால் மொத்தமாக ஓராண்டுக்கு அந்த பகுதியில் 469 மில்லியன் லிட்டர் பியர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை மற்றும் கடும் வெப்பநிலை நீடித்தமை ஆகிய ஏதுக்களினால் இவ்வாறு பியர் விற்பனை அதிகரித்துள்ளது.