சுவிட்சர்லாந்தில் நூற்றுக்கணக்கான நடைபாதைகள் மூடப்பட்டன சமீபத்திய வாரங்களில்இ சுவிட்சர்லாந்தில் கடுமையான புயல்கள் தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
மலையேற்றப் பாதைகளும் இதிலிருந்து விடுபடவில்லை. 600க்கும் மேற்பட்ட நடைபாதைகள் தற்போது மூடப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் சுவிட்சர்லாந்தில் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. வலாய்ஸ் மற்றும் டிசினோவின் தெற்கு மண்டலங்களும், கிராபண்டனின் தெற்கு பள்ளத்தாக்குகளும் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளன.
பத்து பேர் உயிரிழந்தனர் மற்றும் மில்லியன் கணக்கான உள்கட்டமைப்பு சேதம் ஏற்பட்டுள்ளது.

மலையேற்றப்பாதைகளில் மொத்தம் 620 பிரிவுகள் தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின் அளவு மட்டுமின்றிஇ தாமதமாக பனி உருகுவதும் பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றமையால் பாதைகளை மூடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாலை மூடல்கள் தொடர்பாக பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து இதுவே அதிக எண்ணிக்கையிலான சாலை மூடல்களாகும் என நகராட்சிகள் மற்றும் வனத்துறை சேவைகள் போன்ற உள்ளூர் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.