சுவிட்சர்லாந்தில் நிலச்சரிவுகள் அதிகரிக்கும் அபாயம்
சுவிட்சர்லர்நதில் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தின் பல பள்ளத்தாக்குகளில், குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள கிரௌவுண்டன் (Graubünden) கன்டோனில் நிலச்சரிவுகளின் அபாயம் அதிகரித்து வருகிறது.
பிரியன்ஸ் (Brienz) கிராமத்துக்கு மேற்கூறிய மலையின் மேற்பகுதி “ஐரோப்பாவின் மிகச் சிறந்த சரிவு இடம்” எனப் பெயர் பெற்றிருந்தாலும், ஆபத்துக்களும் காணப்படுகின்றன.
Bern கன்டோனிலுள்ள பிரியன்ஸ் கிராமத்தில், 80-க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த நவம்பர் மாதம் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகள் ஒரு பெரிய பாறை சரிவால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டில், சுமார் 1.2 மில்லியன் கன மீட்டர் பாறை மற்றும் மண், கல், என்பன கிராமத்துக்கு அருகே சரிந்து நாசப்படுத்தியது.

2017ஆம் ஆண்டு போண்டோ, பிரெகாலியா பகுதியில் நிகழ்ந்த பீஸ் செங்காலோ (Piz Cengalo) பாறை சரிவில் 8 பேர் உயிரிழந்தனர். அதில் 3 மில்லியன் கன மீட்டர் பாறைகள் சரிந்தன. சில வாரங்களுக்கு முன், வலெய்ஸ் கன்டோனில் உள்ள பிளாட்டென் (Blatten) கிராமமும், இதேபோன்று மண்ணும் பாறையும் கலந்த சரிவால் புதையுண்டது.
கிரௌவுண்டன் மாநிலத்தில் உள்ள 170,000 கட்டிடங்களில், 10%–இற்கும் மேற்பட்டவை இயற்கை அபாயப் பிரதேசங்களில் உள்ளன. அதில் 5,100 வீடுகள் குடியிருப்புக்கானவை. மீதமுள்ளவை விவசாய, தொழில்துறை மற்றும் பிற பயன்பாடுகளுக்காக உள்ளன.
இந்த கன்டோன் நிலச்சரிவுகளுடன் சேர்த்து, பனிச்சரிவுகள், மண் வெள்ளங்கள், வெள்ளப்பெருக்குகள், நிலநடுக்கங்கள் என பல அபாயங்களுக்கு உள்ளாகும்.
இதில், நிலநடுக்கமே மிகப்பெரிய ஆபாயமாக கருதப்படுகிறது. கூர் (Chur) பகுதியில் 5.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால், அது பல உயிரிழப்புகள் மற்றும் பில்லியன் கணக்கில் சேதத்தை ஏற்படுத்தும் என கன்டோன் இயற்கை அபாய நிபுணர் அர்பன் மைசென் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.