சுவிட்சர்லாந்தில் நாளைய தினம் நேரமாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலத்தை முன்னிட்டு இவ்வாறு நேரமாற்றம் வழமையாக அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இம்முறையும் குளிர்காலத்திற்காக இவ்வாறு நேரமாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது.
நாளைய தினம் (29-10-2023) ஒரு மணித்தியால நேரமாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனவே நீங்கள் சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்கள் என்றால் உங்களுடைய கடிகாரங்களை ஒரு மணித்தியாலம் பின்னோக்கி நகர்த்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளின் நேர மாற்றத்துடன் இணைந்து போகும் வகையில் 1981 ஆம் ஆண்டு முதல் இந்த நேரம் மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. குளிர்காலத்தில் ஒரு மணித்தியாலம் பின்னோக்கி நகர்த்தப்படுகின்றது.
இந்த நேர மாற்றத்தை ரத்து செய்வது தொடர்பில் கையொப்பங்கள் திரட்டி பொது வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கப்பட்ட போதும் அது வெற்றி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் அதிகாலை 3.00 மணியாகும் போது கடிகாரத்தை அதிகாலை 2.00 மணிக்கு மீளத் திருப்ப வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.