சுவிட்சர்லாந்தில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் இடம்பெயர்ந்தும் பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டும் உள்ளது.
மேலும் பாரிய அளவிலான சொத்துசேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சிம்ப்ளான் கணவாய் மூடப்பட்டுள்ளது.
பாதைகளுக்கான ஃபெடரல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளபடி, தெற்கு சுவிட்சர்லாந்தை இத்தாலியுடன் இணைக்கும் மலைப்பாதையை சுற்றியுள்ள பகுதி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Simplonpass
மேலும், வார இறுதியில் இப்பகுதியில் பெய்த கனமழையால் அடித்துவரப்பட்ட குப்பைகள் ‘சாலையின் மேற்பரப்பில் பரவிக்கிடப்பதால் இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிடுவது தற்போது சாத்தியமற்றது’ என்று பாதைகளுக்கான பெடரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.