சுவிட்சர்லாந்தில் கோடை காலம் ஆரம்பித்திருந்தாலும் இன்னும் மக்கள் சரியாக அதனை அனுபவிக்க முடியாத ஒரு நிலை காணப்படுகிறது.
காரணம் சுவிட்சர்லாந்தில் பல்வேறு மாகாணங்களிலும் கோடை காலம் தொடங்கியது முதல் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது.
குறிப்பாக, கடந்த வாரம் முதல் பெய்த மழை காரணமாக சுவிசின் பல ஏரிகள் பெருக்கடுத்துள்ளதோடு ஆங்காங்கே வீதிகளிலும் சுரங்க அறைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் கோடை காலத்தை நம்பி, கோடைபொழுதுபோக்கு தடங்கள், நீச்சல்தடாகங்களை அமைந்து வணிகத்தில் ஈடுபடுவபர்களுக்கு மந்தநிலமையே இதுவரை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
காரணம் தொடர்ச்சியான மழை மற்றும் குளிர்ச்சியான காலநிலை தொடர்வதால் மக்கள் நீச்சல்தடாகங்களுக்கு செல்வதில்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை நம்பியுள்ளவர்களின் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.