சுவிட்சர்லாந்தில் சிறுவர்களை ஆபாச படங்கள் எடுத்த இருவர் கைது – சுவிட்சர்லாந்தில் சிறுவர் பாலியல் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுவர்களை பயன்படுத்தி ஆபாச படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேற்கு சுவிட்சர்லாந்து பகுதி பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 96 பேரிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் ஆரம்பம் முதல் ஒக்ரோபர் மாதம் இறுதி வரையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் போது 42 வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் சிறுவர்களை ஆபாச படங்கள் எடுத்த இருவர் கைது
இந்த சோதனைகளின் போது 311 கணனிகள் மற்றும் தகவல் சேமிப்பு கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறுவர் ஆபாச காணொளிகளை பார்வையிட்ட 100 பேரிடம் பொலிஸார் விசாரணை நடாத்தியுள்ளனர்.
இவ்வாறு விசாரணை நடாத்தப்பட்டவர்களில் பத்து பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.