சுவிட்சர்லாந்தில் கடந்த இரண்டு நாட்களாக தமிழர்கள் மத்தியில் அதிக பேசுபொருளாக இருக்கக்கூடிய செய்தி மீண்டும் சூடு பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் சென்ட்காலன் மாகாணத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த ஒரு தாய் தனது 10 வயது பெண் குழந்தைக்கு பேசத்தாகத வார்த்தைகளால் பேசியும் துன்புறுத்தியதும் தொடர்பான சிசி டிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அது தொடர்பான காணொளியை நாமும் வெளியிட்டிருந்தோம். அதனை தொடர்ந்து குறித்த பெண்ணுக்கு எதிராக பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட ஆரம்பத்தார்கள்.
காட்டுத்தீபோல் பரவிய இந்த காணொளி தொடர்பான செய்தி தற்போது மீண்டும் சு’டுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
காணொளியில் தனது மகளை துன்புறுத்துவதாக கருதப்படும் பெண் அதே சிசி டிவி முன் தனது குழந்தைகள் முன் நின்று பகிரங்க மன்னிப்பு கேட்பது போன்ற புதிய காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை தொடர்ந்து குறித்த பெண் தனது தவறை உணர்ந்துவிட்டதாக பலரும் பாராட்டினாலும் இது சுவிட்சரலாந்து போலீசில் இருந்து தப்பிக்க செய்யும் நாடகம் எனவும் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.
எது எப்படியோ குறித்த தாய் பெற்ற குழந்தைகளிடமே மன்னிப்பு கேட்கும் போது கவலையாக இருப்பதாகவும் தவறை உணர்ந்தவரை இனிமேல் சமூகவலைத்தளங்களில் யாரும் விமர்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பலரும் தன்னை கேவலமாக விமர்சிப்பதால் தான் மனதளவில் பாதிக்ப்பட்டிருப்பதாகவும் தன் தவறை ஒப்புக்கொள்வதாகவும் கூறி கண்ணீர் மல்க குறித்த பெண் கூறியுள்ளார். அது தொடர்பான முழுமையான காணொளி காட்சிகள் இதோ.