சுவிட்சர்லாந்தில் காவல்துறை காவலில் உயிரிழந்த நைஜீரிய நபர் தொடர்பாக, லௌசான் (Lausanne) நகரில் சனிக்கிழமை பிற்பகலில் சுமார் 1,000 பேர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். காவல்துறையின் வன்முறையை கண்டித்து, மரணத்திற்கு நீதி வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மொன்பெனான் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற பேரணியில், “காவல்துறை மீண்டும் ஒரு உயிரை கொன்று விட்டது” என பேச்சாளர் ஒருவர் தனது உரையில் தெரிவித்தார்.
“இது ஒரு இனரீதியான உரிமை மறுக்கும் காவல்துறையால் நிகழ்ந்த கொடுமை” என்றும், “வரலாறு மீண்டும் மீண்டும் இதனை வலியுறுத்துவதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் வெளட் கன்டோனில் நான்கு கறுப்பின ஆண்கள் காவல்துறை நடவடிக்கையால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம், லௌசானில் காவல்துறையினருக்கான சங்கமான Association of Lausanne Police Officers, இந்த சம்பவத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு “முழு ஆதரவு” வழங்குவதாக கூறியுள்ளது.
சில ஊடகங்களும் பொதுமக்களின் கருத்துக்களும் “விவேகமற்ற மற்றும் கட்டுப்பாடின்றி” பிரசாரம் செய்ததால், குற்றமற்றவர்களாக இருப்பதற்கான உரிமை (presumption of innocence) தகர்க்கப்பட்டுவிட்டதாக சங்கம் விமர்சித்துள்ளது.
அதே சமயம், மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் இன்னும் தெளிவாக தெரியாத நிலையில் விரைவான முடிவுகளுக்கு வந்துவிடுவதை Association of Lausanne Police Officers சங்கம் கண்டித்துள்ளது.