சுவிட்சர்லாந்தில் கார் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் புதிய கார் பதிவுகளானது 8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் 300’000 கார்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் – ரஸ்ய யுத்தம் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பின்னடைவே கார் விற்பனை வீழ்ச்சிக்கான பிரதான ஏதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2022 ஆண்டில் 226’000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெருந்தொற்றுக்கு முன்னராக காலப் பகுதியுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கையானது 20 வீத வீழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் இலத்திரனியல் வாகனங்களின் விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இலத்திரனியல் கார்களின் விற்பனையானது 17 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
புதிய மோட்டார் சைக்கிள்களின் விற்பனையிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.