சுவிட்சர்லாந்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மின் சிகரெட் தடை புகையிலை பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் மீதான மத்திய சட்டத்தை அரசாங்கம் திருத்தியமைக்கும் வகையில் சுவிட்சர்லாந்தில் மின்னணு சிகரெட்டுகளை தடை செய்ய தேசிய கவுன்சில் வாக்களித்துள்ளது.
ஃபெடரல் கவுன்சில் இப்போது ‘பப் பார்ஸ்’ என அழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுகளின் விற்பனையை சுவிட்சர்லாந்தில் தடை செய்ய தீர்மானித்துள்ளது.

எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் அதன் மாறுபட்ட சுவைகள் மற்றும் துடிப்பான வண்ணங்களுடன் இளைஞர்களை ஈர்க்கின்றன. மேலும் அவை மிக வேகமான முறையில் பிரபலமாகின்றன.
2022 இல், 10 மில்லியன் யூனிட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. குறித்த எலக்ரானிக் சிகரட்டுகளின் கழிவுகள் பெரும்பாலும் ஏரிகள், புல்வெளிகளை மாசுபடுத்துகின்றன. இதனால் கணிசமான அளவு தூய்மைப்படுத்தும் செலவுகளை ஏற்படுத்துகின்றன.
எனினும் இந்த சிகரட்டுகளின் பாதிப்புகள் தொடர்பாக இதுவரை எதுவித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் இந்த சாதனங்களின் எதிர்காலம் குறித்து மாநில கவுன்சில் இப்போது முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.