சுவிட்சர்லாந்தில் ஏலத்தில் விடப்படும் பழமையான விண்கல்…!! பிரபஞ்சத்தின் ஒரு தனித்துவமான பகுதியாக கருதப்படும் விண்கல் ஒன்று அடுத்த வாரம் லவுசானில் ஏலம் விடப்படவிருக்கிறது.
நான்டன் விண்கல் என்றழைக்கப்படும் குறித்த விண்கல் 1516 ஆம் ஆண்டில் பூமியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விண்கல் சுமார் நான்கரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பத்தில் உருவானதாக கருதப்படுகிறது.
இது 1958 ஆம் ஆண்டு சீனாவின் நான்டன் பகுதியில் ஆசியாவில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய விண்கல் மழைக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உட்பட உலகம் முழுவதும் இவ்வாறான விண்கல்லின் பகுதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.