சுவிட்சர்லாந்தில் வரி செலுத்துவது என்பது கட்டாயமான ஒரு விடயமாகவே இருக்கிறது. வருட இறுதியில் அதற்காக ஒரு படிவத்தை நிரப்பி எமது வருடாந்த செலவினங்களை சமர்ப்பித்தல் வேண்டும். எமது வருடாந்த வருமானம் எவ்வளவு செலவு எவ்வளவு என தீர்மானிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் வரிவதிப்பு விதிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் எந்த கன்டோனில் வரி விதிப்பு குறைவு தெரியுமா.?
ஆனால் சுவிற்சர்லாந்தில் இருக்கும் அனைவருக்கும் ஒரே அளவிலான வரிவிதிப்போ அல்லது அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே அளவிலான வரி விதிப்போ மேற்கொள்ளப்படுவதில்லை.
வரி செலுத்துதல் என்பது மாகாணத்துக்கு மாகாணம் வேறுபட்டே காணப்படுகிறது. இந்த பதிவில் எந்த மாகாணத்தில் அதிக வரிவிதிப்பு எந்த மாகாணத்தில் குறைந்த அளவு வரி விதிப்பு நடைபெறுகிறது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு இடங்களிலும் மாறுபட்ட அளவில் வரி அறவீடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பல்தேசிய நிறுவனங்கள் அதிகளவில் அமைந்துள்ள, வெளிநாட்டவர்கள் அதிகளவில் வசிக்கும் சில நகரங்களில் வரி அறவீட்டுத் தொகை குறைவாகவே காணப்படுகின்றது.
சூரிச்சை (zurich) விடவும் கூடுதல் அளவில் வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்கி வரும் சூக்(Zug) கான்டனில் வரி அறவீடு குறைவாக காணப்படுகின்றது. ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் சுவிஸ் பிராங்குகள் வருமானம் ஈட்டும் ஒருவரிடம் 6.5 வீதத்திற்கு குறைந்த அளவில் வரி அறவீடு செய்யப்படுகின்றது.
அதே வேளையில் நியூசாட்டெல் கான்டனில் 19 வீதமளவில் வரி அறவீடு செய்யப்படுகின்றது. இது மாத்திரமின்றி ஏனைய மாகாணங்களுக்கும் இந்த வரி விதிப்பு வீதம் என்பது சுவிற்சர்லாந்தில் மாறுபட்டே காணப்படுகிறது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.