சுவிட்சர்லாந்தில் இடி மின்னலை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பமொன்று வெற்றிகரமாக பரிசோதனையிடப்பட்டுள்ளது. அதி சக்தி வாய்ந்த லேசர் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி இவ்வாறு மின்னல் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பமானது மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் வெற்றியளித்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவிஸில் இடி மின்னலை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ?
மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள், காற்றாலைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்டமைப்புக்களை மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மின்னல் தாக்கம் காரணமாக பல பில்லியன் பிராங்குகள் வருடாந்தம் இழப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மின்னல் தாக்கம் காரணமாக வருடாந்தம் பல்லாயிரக் கணக்கான உயிர்களும் காவு கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலை உச்சியிலிருந்து வானை நோக்கி லேசர் கதிர்களை பீய்ச்சி அடித்து அதன் ஊடாக மின்னல் தாக்கத்தை கட்டுப்படுத்துவதே இந்த தொழில்நுட்பமாகும்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.