சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் விபசாரம் தொடர்பில் சர்ச்சை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ரீம் அல்சலேம், விபச்சாரத்தின் மீதான அதன் நிலைப்பாட்டிற்காக சுவிட்சர்லாந்தைத் தனிமைப்படுத்தி, அதை ‘பிம்ப் ஸ்டேட்’ என்று அழைத்தார்.
ரீம் அல்சலேம் தனது அறிக்கையை ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபச்சாரமானது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பல்வேறு வகையான வன்முறைகளுக்கு வழிவகுப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
இந்த நடைமுறையை சட்டப்பூர்வமாக்கும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் அணுகுமுறைகள் பாலியல் தொழிலாளர்களுக்கு வரி விதித்து அதில் இருந்து அரசு லாபம் அடைவதாக தெரிவிக்கிறார்.
அது ஒரு பாலியல் தொழிலாளர்களை சுரண்டும் செயற்பாடுகளை உருவாக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். எனவே தான் சுவிட்சர்லாந்தைத் ‘பிம்ப் ஸ்டேட்’ என அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.