சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருக்கும் தமிழின அழிப்பு நினைவு நாள் 2025
ஈழத் தமிழர் வரலாற்றில் தொடரும் தமிழின அழிப்பின் அதியுச்ச குறியீடான முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுநாள் சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ளது. ஈழத் தமிழர் வரலாற்றில் மாபெரும் மனிதப்பேரவலத்தின் ஆறாத வடுக்களை சுமந்து 16 வது ஆண்டாக இறுதி யுத்தத்தில் தம் இன்னுயிர்களை உயிர்கொடை கொடுத்து வித்தான மாவீரர்களையும் கொத்தக்கொத்தாக கொன்றழிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களையும் நெஞ்சில் நிறுத்தி அவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வும்இ கவனயீர்ப்பு ஒன்று கூடலும் பேர்ன் மாநகரில் இடம்பெறுகிறது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மே 17ம் திகதி பிற்பகல் 3மணி தொடக்கம் 5 மணிவரை நடைபெறவுள்ளது. குறிப்பாக மே18 தமிழின நாளாக கருதப்படுகிறது. எனினும் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் பொது இடங்களில் நிகழ்வுகள் நடாத்த அனுமதி இல்லை.
எனவே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாளை முதல் நாளான 17.05 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது மாத்திரமின்றி பேரன்னில் தமிழின அழிப்புக்கு நீதிகோரி கவனயீர்ப்பு நடைப்பயணம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.