சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் 2025 க்கான உலக சீஸ் விருது விழா..!! 2025 இலையுதிர்காலத்தில், சுவிட்சர்லாந்து முதல் முறையாக *உலக சீஸ் விருதுகளை* நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் குறித்த நிகழ்வு சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாகாணத்தில் இடம்பெறவிருக்கிறது.
உலகின் சிறந்த பாலாடைக்கட்டிகளை தெரிவுசெய்யும் இந்த உலகளாவிய போட்டி நவம்பர் 13 முதல் 15 வரை பெர்னெக்ஸ்போ தளத்தில் நடைபெறும். இந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள அமைப்பான ஸ்விட்சர்லாந்து சீஸ் மார்க்கெட்டிங், சீஸ் போட்டிக்கு கூடுதலாக, நிகழ்வில் “Swiss Fine Food Market” இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த சந்தையில் சுவிஸ் சீஸ் காட்சிப்படுத்துவது மட்டுமல்லாமல், சுவிஸ் ஒயின்கள் மற்றும் இறைச்சிகள் உட்பட பிற உள்ளூர் தயாரிப்புகளையும் முன்னிலைப்படுத்தும்.

50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 5,000 பாலாடைக்கட்டிகள் முதல் பரிசுக்கு போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சீஸ் விருதுகள் 1988 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனை பிரிட்டிஷ் வெளியீட்டாளரான Guild of Fine Food ஏற்பாடு செய்து வருகிறது. மிக சமீபத்திய விருது வழங்கும் விழா நவம்பர் 2024 இல் போர்ச்சுகலின் விசுவில் நடைபெற்றது.
பாலாடைக்கட்டி பிரியர்கள் மற்றும் உணவு ஆர்வலர்கள் உலகெங்கிலும் உள்ள சில சிறந்த பாலாடைக்கட்டிகளை மற்ற சுவிஸ் உணவுகளுடன் சேர்த்து ரசிக்க இது ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
©Keystone/SDA