பிரான்ஸின் கோடீஸ்வரர் ஒருவருக்கு சுவிட்சர்லாந்தில் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவைகள் சுவிட்சர்லாந்தில் மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் அதி வேகமாக வாகனம் ஓட்டிய கோடீஸ்வரருக்கு குடியுரிமை மறுப்பு
குறிப்பாக இரண்டு தடவைகள் வேகமாக வாகனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து குடியுரிமை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த குடியுரிமை நிராகரிப்பிற்கு எதிராக குறித்த கோடீஸ்வர பிரெஞ்சு பிரஜை, நீதிமன்றில் தொடுத்த வழக்கு விசாரணைகளின் போது, இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரெஞ்சு பிரஜை கடந்த நான்கு தசாப்தங்களாக சுவிட்சர்லாந்தில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில், அதி சொகுசு ஹோட்டல்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் இந்த நபருக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இந்த நபர் அதி வேகமாக வாகனத்தை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.