சுவிட்சர்லாந்தில் அடிக்கடி பெய்து வரும் கனமழை சுவிட்சர்லாந்தில் கனமழை அடிக்கடி பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காலநிலை மாற்றம் சுவிட்சர்லாந்தில் அதிக மழைப்பொழிவை அதிக தீவிரமாகவும் அடிக்கடியும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆல்பைன் சரிவுகள் மற்றும் வடகிழக்கு சுவிட்சர்லாந்தில் இந்நிலமை ஏற்பட்டுள்ளது.
கடந்த 120 ஆண்டுகளில் பெய்த மழை அளவுகளை ஆய்வு செய்த மத்திய வானிலை ஆய்வு அலுவலகம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் இருந்து இது வெளிப்படுகிறது.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட, சராசரியாக, ஒரு வருடத்திற்கு அதிக தினசரி மழைப்பொழிவு இப்போது 11 சதவீதம் அதிகமாக உள்ளது என்று அது கண்டறிந்துள்ளது.
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட, ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட நான்கு முறை பெய்யும் மிக அதிக மழை, இன்று 25 சதவீதம் அதிகமாக உள்ளது.
1981 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் பத்து நிமிடங்கள் முதல் ஐந்து நாட்கள் வரை நீடித்த கனமழை நிகழ்வுகளையும் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.