சுவிட்சர்லாந்தில் அகில உலக கம்பன் கழகம் நடாத்தும் “கம்மன் விழா” 2023 திருவள்ளுவர் பற்றிய சிறப்புகளை சொன்னோம் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு குறள், இரண்டு குறள் இல்லை மொத்தம் 1330 குறட்பாக்களை வாழ்க்கைக்கு பயன்படும் கருத்துக்களோடு உலக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
திருவள்ளுவரை சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார். உலக மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கை முறையில் சரியான வழியில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று தனது 133 அதிகாரங்கள் மூலம் பல வருடங்களுக்கு முன்பே தெளிவாக எடுத்துரைத்தவர் திருவள்ளுவர்.
சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரே ஒரு வள்ளுவர் சிலை
அப்படிப்பட்ட ஒரு தமிழ் பெரும் புலவருக்கு புலம்பெயர் தேசத்தில் சிலை வைப்பது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை என்றே சொல்லலாம். அவ்வாறான ஒரு முயற்சியினை மேற்கொண்டு வெற்றியும் கண்டிருக்கிறது சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் ஆலயம் நிர்வாகம்.
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் அமைந்துள்ள (Dürnten) தூர்தன் என்ற அழகிய கிராமத்தில் எழில் கொஞ்சும் இயற்கை அழகோடு சேர்ந்து அருள் பாலிக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ளது வள்ளுவர் சிலை.
ஆலயத்தின் அருகாமையில் உள்ள நெடுஞ்சாலையை பார்த்தவாறு பரவசம் ஊட்டுகிறார் வள்ளுவர். சுவிட்சர்லாந்தில் ஏன்.., ஐரோப்பாவில் வேறு எங்கும், எவரும் செய்யாத ஒரு விடயமாக இது பார்க்கப்படுகிறது.
தமிழ்புலவர் என்று அழைக்கப்படும் வள்ளுவருக்கான ஒரு கௌரவம் புலம்பெயர் நாட்டில் கொடுக்கப்பட்டுள்ளமை அங்கு வாழும் அனைத்து தமிழர்களுக்கும் பெருமையான ஒரு விடயமே.
இந்த அரிய முயற்சியை மேற்கொண்ட ஸ்ரீ விஷ்ணுதுர்க்கை அம்மன் ஆலய பீடாதிபதியும் அகில உலக கம்பன் கழக தலைவருமாகிய ஸ்ரீ சரகண பவானந்தா சுவாமிகாளுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
வள்ளுவம் பேசுவோம்
ஒரு வருட பூர்த்தி விழா ஆரம்பம்
அது மாத்திரம் இன்றி இந்த வள்ளுவர் சிலை திறக்கப்பட்டு எதிர்வரும் 30ம் திகதி (30/09/23) 1 வருட பூர்த்தியினையும் கொண்டாடுகிறது அகில உலக கம்பன் கழகம். வள்ளுவம் பேசுவோம் என்ற தொனியுடன் ஆலய வளாகத்தில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு அனைத்து அடியாளர்களையும் அன்போடு அழைக்கிறார்கள் ஆலய நிர்வாகத்தினர்.
வள்ளுவம் பேசுவோம்
அது மாத்திரம் இன்றி ‘வள்ளுவம் பேசுவோம்’ என்ற தலைப்பில் பேச ஆர்வம் உள்ள அனைவரும் இந்த நிகழ்வில் பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மேலதிக விபரங்கள் தேவைப்படின் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலங்கங்களுடன் நீங்கள் தொடர்புகொள்ள முடியும்.
புலம்பெயர் தேசத்தில் தமிழ் மறந்து வாழும் புதிய தலைமுறையினருக்கு இவ்வாறான நிகழ்வுகள் அறிவுத்தீனி போடும் என்பதில் ஐயமில்லை. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து வள்ளுவர் பற்றி அறிய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பீர்கள் எனவும் நம்புகிறோம்
குறித்த நிகழ்வுக்கு ஊடக அனுசரணையாளர்களாக தமது முழுமையான பங்களிப்பையும், ஆதரவினையும் SwissTamilRadio மற்றும் SwissTamil24.Com வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.