சுவிட்சர்லாந்தின் கிறாவுன்டன் கன்டோனின் டாவோஸ் நகரில் கடுமையான இராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் ஆரம்பமான உலகப் பொருளாதார மாநாட்டை முன்னிட்டு கடுமையான இராணுவப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தினம் முதல் எதிர்வரும் 24ம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் ஐயாயிரம் இராணுவப் படையினர் டாவோஸில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமானப் படையினர் விமானங்கள் தொடர்பிலான தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விசேட பாதுகாப்பு பணிகளுக்காக விமானப் படை விமானங்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நடைபெற உள்ள உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் தமிழ்நாடும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது. டாவோஸ் மாநாட்டில் ‘வளர்ச்சியில் முன்னேறி பாயும் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டம் வகுத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள்இ ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் பேச்சு நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.