சிறந்த ஓய்வூதியம் பெறுவதில் சுவிட்சர்லாந்து முதலிடம் நார்வே மற்றும் ஐஸ்லாந்தை விட சுவிட்சர்லாந்து இப்போது 2024 இல் ஓய்வு பெறுவதற்கான சிறந்த நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற சிறந்த நாடுகளில் அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவை அடங்குகின்றன.
சுவிட்சர்லாந்து, ஓய்வூதிய நிதி, நல்வாழ்வு, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய நான்கு முக்கியமான துறைகளில் சிறப்பாக செயல்பபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறைந்த வேலையின்மை மற்றும் நல்ல வருமான சமத்துவத்துடன் நல்வாழ்வில் மேம்பட்டது, மேலும் ஆரோக்கியத்தில், நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், சுகாதாரச் செலவு மற்றும் வாழ்க்கைத் தரத்தில் சிறிய சரிவுகள் இருந்தன. வரிகள் மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் குறைந்த பணவீக்கம் நிதி சமநிலைக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.
ஒரு சில விடயங்களில் சில பின்தங்கிய நிலைகள் காணப்பட்டாலும் சுவிட்சர்லாந்து இன்னும் மகிழ்ச்சியில் உயர்ந்த இடத்தில் உள்ளதோடு மற்றும் ஓய்வு பெற ஒரு சிறந்த இடமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.