சிரிய நாட்டு பெண்ணுக்கு சுவிட்சர்லாந்து ரயிலுக்குள் நடந்த கொடுமை .! அரசாங்கம் நட்ட ஈடு
ரயிலில் வைத்து கருக்கலைந்த சிரிய நாட்டு பெண் ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈடு வழங்கியுள்ளது. நாடு கடத்தப்பட்ட போது குறித்த பெண் இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு குறித்த பெண்ணை சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இத்தாலிக்கு நாடு கடத்தியிருந்தனர். இந்த ரயில் பயணத்தின் போது கர்ப்பிணியாகவிருந்த பெண்ணின் கருக்கலைந்து விட்டது.
இதற்காக தமக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈடு வழங்க வேண்டுமென கோரி குறித்த பெண் வழக்குத தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் அரசாங்கம் அந்தப் பெண்ணுக்கு 12000 சுவிஸ் பிராங்குகளை நட்டஈடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
குறித்த பெண் உள்ளிட்ட 30 பேர் பிரான்ஸ் – சுவிஸ் எல்லை வழியாக இத்தாலிக்கு சென்று அங்கு தஞ்சம் புகுவதற்கு முயற்சித்துள்ளனர். இதன் போது சுவிஸ் அதிகாரிகள் குறித்த அனைவரையும் கைது செய்து, இத்தாலிக்கு நாடு கடத்தியிருந்தனர்.

இவ்வாறு ரயிலில் நாடு கடத்தப்பட்ட போது கர்ப்பிணியான பெண் தனது பிரசவ வேதனை பற்றி அதிகாரிகளிடம் கூறிய போது அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் அசமந்த போக்கிற்காக அரசாங்கம் இவ்வாறு நட்டஈட்டுத் தொகையை செலுத்த உள்ளது.