கோத்தாட் சுரங்கப்பாதை போக்குவரத்து நெரிசல் குறித்து எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் கோத்தார்ட் சுரங்கப் பகுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படலாம் என வியா சுயிஸ் போக்குவரத்து சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் முக்கியமான வடக்கு-தெற்கு ஆல்ப்ஸ் சுரங்கப்பாதையான Gotthard Tunnel வழியாக பயணம் செய்பவர்கள், Whitsun விடுமுறையை முன்னிட்டு, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் நேரங்களில் மிக நீண்ட நெரிசலை எதிர்நோக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நெரிசல்கள் வெள்ளி இரவிலும் நீடிக்கக்கூடும் என்றும், பெரும்பாலானோர் விடுமுறை முடிவில், திங்கள் (Whit Monday) திரும்பும் பயணத்திலும் சாலைகள் அதிக போக்குவரத்து நெரிசல்களை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தாட் சுரங்கப்பாதை
வெளியேறும் பயணத்தை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு முன்பாக துவங்குவது நெரிசலை தவிர்க்க உதவும் எனவும், திரும்பும் பயணத்திற்கு, திங்கள் காலை அல்லது திங்கள் இரவு பயணிப்பது பொருத்தமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூரிச் மற்றும் கிழக்கு சுவிட்சர்லாந்து பகுதிகளில் இருந்து பயணிப்பவர்களுக்கு San Bernardino வழி (A13) சிறந்த மாற்றுப் பாதையாக பரிந்துரைக்கப்படுகிறது. பயணிகள் பாதுகாப்பாகவும், திட்டமிட்டு பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளது.