குறைவான பனிப்பொழிவு – நெருக்கடியில் சுவிஸ் ஸ்கீ ரிசார்ட்கள் சுவிட்சர்லாந்தில் போதியளவு பனிப்பொழிவு ஏற்படாத காரணத்தினால் ஸ்கீ ரிசார்ட்களை மூட நேரிட்டுள்ளது.
குறைவான பனிப்பொழிவு – நெருக்கடியில் சுவிஸ் ஸ்கீ ரிசார்ட்கள்
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப் பகுதியில் சுவிட்சர்லாந்து மலைப்பாங்கான பகுதிகளில் பெரும் திரளான மக்கள் கூடி தங்களது விடுமுறையை கொண்டாடி மகிழ்வது வழமையானதாகும்.
எனினும், இம்முறை காலநிலை மாற்றம் காரணமாக இந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாத நிலைமை உருவாகியுள்ளது. குறிப்பாக சற்றே உயரம் குறைந்த மலைப்பாங்கு பகுதிகளில் அமைந்துள்ள ரிசார்ட்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு பல ஸ்கீ ரிசார்ட்களை மூட நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.