கிராபண்டனில் ஏடிஎம் குண்டுவெடிப்பு : இரண்டு பேர் கைது.!!
வெள்ளிக்கிழமை அதிகாலை, கிராவுண்டன் மாகாணத்தில் உள்ள லங்குவாட் (Landquart) இல் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இருந்த ஒரு ஏடிஎம் வெடித்துச் சிதறியது. அதிகாலை 1 மணியளவில், Ganda (காண்டாவில்) உள்ள ஷெல் (SHELL) பெட்ரோல் நிலைய வளாகத்தில் உள்ள ஏடிஎம்-ஐ அடையாளம் தெரியாத நபர்கள் வெடிவைத்து தகர்த்தனர். பின்னர் குற்றவாளிகள் பணங்களை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
கிராவுண்டன் கன்டோனல் போலீசார், செயிண்ட் கேலன் கன்டோனல் போலீசார் மற்றும் லிச்சென்ஸ்டீன் மாகாணத்தின் தேசிய போலீசார் ஆகியோர் இணைந்து நடத்திய பெரிய அளவிலான தேடுதல் வேட்டையின் விளைவாக, செயிண்ட் கேலன் கன்டோனில் உள்ள பேட் ராகஸ் அருகே 30 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது அதிகாலை 1:35 மணியளவில் நடந்தது.

சூரிச் தடயவியல் நிறுவனமும் விசாரணையில் ஈடுபட்டது. கிராபுண்டன் கன்டோனல் காவல்துறை, ஃபெடரல் போலீஸ் ஃபெட்போல் மற்றும் செயிண்ட் கேலன் கன்டோனல் காவல்துறையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆரம்பத்தில், செயிண்ட் கேலன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் பொறுப்பேற்றது. இருப்பினும், இது வெடிபொருட்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்பதால், இந்த வழக்கில் இப்போது மத்திய அரசு வழக்கறிஞர் அலுவலகம் தலைமை தாங்குகிறது. குற்றத்தின் சரியான பின்னணியை தெளிவுபடுத்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Kapo GR