கான்ஸ்டன்ஸ் ஏரியில் தொழில்முறை மீனவர்களின் வருமானம் தொடர்ந்து வெகுவாகக் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கான்ஸ்டன்ஸ் ஏரியைச் சுற்றியுள்ள 61 தொழில்முறை மீனவர்கள் கடந்த ஆண்டு 133 டன் மீன்களைப் பிடித்தனர். இந்த விளைச்சல் சமீபத்திய ஆண்டுகளில் பெற்ற சராசரி 318 டன்களை விடக் குறைவாக உள்ளது.
Fotos: Ivan Valetny
விகிதாச்சாரத்தின் அடிப்படையில் மிக முக்கியமான மீன் இனம் 38 டன்கள் கொண்ட வார்ஸ் என்ற மீன் இனம் ஆகும். அதைத் தொடர்ந்து 16 டன்கள் கொண்ட ஹெக்ட் மீன் உள்ளது என்று கான்ஸ்டன்ஸ் ஏரி மீன்வளத்திற்கான சர்வதேச அதிகாரமளிப்பு மாநாடு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கன் பிடிக்கும் மேலும் பல மீன்களின் விகிதாரச அடிப்படையிலான புள்ளிவிபரங்களும் குறிப்பிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக ஃபெல்கென் எனப்படும் மீன் பிடிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் கான்ஸ்டன்ஸ் ஏரியில் உள்ள தொழில்முறை மீனவர்களுக்கு அவை முக்கிய வருமான ஆதாரமாக இருந்தன. இருப்பினும், கடந்த ஆண்டு, அவர்கள் இந்த ஏரியில் இருந்து பத்து டன் மீன் இனங்களை மட்டுமே பிடிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Foto: BLINKER.DE
ஃபெல்கென் மீன்களின் தொகை குறைவாக இருப்பதால், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த குறிப்பிட்ட மீன்களுக்கு மூன்று ஆண்டு மீன்பிடி தடையை விதிக்க மீன்வளத்திற்கான சர்வதேச அதிகாரமளித்தல் மாநாடு கடந்த ஆண்டு முடிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.