கன்டோன் Zug இல் வீதி சமிஞ்சைவிளக்கு விதி முறைகளை மீறி பயணித்தவர் விபத்து.!! சுக் (Zug) கன்டோனில் வீதி சமிஞ்சை விளக்கு விதி முறைகளை மீறியமையினால் விபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் :-
கன்டோன் Zug இல் வீதி சமிஞ்சைவிளக்கு விதி முறைகளை மீறி பயணித்தவர் விபத்து.!!
“Kurfürst” சந்திப்பில், இரண்டு கார்களுக்கு இடையே நடந்த இந்த விபத்து சம்பவமானது வெள்ளிக்கிழமை மாலை (ஜனவரி 13, 2023), 6:30 மணிக்கு முன்னதாக, Baar என்ற பகுதியில் உள்ள Süd-/Weststrasse சந்தியில் இடம்பெற்றுள்ளது. Baar லிருந்து Zug திசையில் 50 வயது ஓட்டுநர் பயணித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, போக்குவரத்து விளக்குகள் ஆரஞ்சு நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்திற்கு மாறியது இதன்போது காரை நிறுத்தாத ட்ரைவர் தொடர்ச்சியான பயணித்துள்ளார். அதே நேரத்தில், 41 வயதான டிரைவர் ஒருவர் Weststrasse லிருந்து வந்து, A14 மோட்டார் பாதையின் திசையில் சந்திப்பைக் கடக்க விரும்பினார்.
இதனால், பக்கவாட்டில் மோதல் ஏற்பட்டது. குறித்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, கார்களுக்கு ஏற்பட்ட சொத்து சேதம் பல பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களும் மீண்டும் இயக்க முடியாத நிலையில் இருந்தமையினால் இழுத்து செல்லவேண்டியேற்பட்டது. உண்மைகளை ஆய்வு செய்வதற்கும் சேதமடைந்த வாகனங்களை அகற்றுவதற்கும் குறித்த வீதியின் சந்திப்பு பகுதி சற்று நேரம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால் இதனை அண்டிய சில பகுதியிகள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.