கன்டோன் வலைஸ்சில் பயங்கர விபத்து : இருவர் பலி.!! வெள்ளிக்கிழமை மாலை வலைஸ் மாகாணத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் 83 வயதான சாரதியும் அவரது 79 வயது பயணியும் உயிரிழந்தனர்.
கார் ஒரு கூர்மையான வளைவில் சாலையை விட்டு விலகி தரையில் பல முறைய உறுண்டதாக வலாய்ஸ் கன்டோனல் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் சுவிஸ் நாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் இத்தாலி எல்லையில் உள்ள சாமோயில் கிராமத்தின் மேல் பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. அன்று இரவு 10:45 மணியளவில் ஒரு கூர்மையான வலது பக்க வளைவில்இ வாகனம் சாலையை விட்டு வெளியேறியது என்று போலீசார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.