கன்டோன் ஊரியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயம்! இன்று, பிப்ரவரி 20, 2024, செவ்வாய்கிழமை, மதியம் 1 மணியளவில், ஊரி உரிமத் தகடுகளுடன் கூடிய டிப்பருடன் காரை ஓட்டிச் சென்றவர் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
இவ்விபத்தில் 29 வயதான சாரதி ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். மற்ற ஒட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
(c) Uri Polizei
ஊரி கன்டோனல் அவசர சேவை மூலம் ஓட்டுநர்கள் இருவரும் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்செல்லப்பட்டனர். குறித்த விபத்தினால் சுமார் 35,000 பிராங்குகள் வரை சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.