ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி – வெளியாக முக்கிய அறிவிப்பு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இத்தாலியை எதிர்த்து சுவிட்சர்லாந்து இன்று சனிக்கிழமை விளையாடுகிறது.
ஆனால் வானிலை எதிராளியைப் போலவே சங்கடமாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடுமையான வானிலைக்கான சாத்தியமுள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடுமையான இடியுடன் கூடிய மழை மாலை மற்றும் இரவில் சுவிட்சர்லாந்து முழுவதும் நகரும் எனவும் பலத்த காற்றும் வீசும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே சனிக்கிழமை மாலை இத்தாலிக்கு எதிரான சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மோதலை பொது வெளியில் பார்வையிடுவதை தவிர்ப்பது நல்லது எனவும் காலநிலை மையம் அறிவித்துள்ளது.

இன்று 30 முதல் 31 டிகிரி வரை வெப்பநிலையுடன் வெப்பமாக இருக்கும். மேலும் சூரிச் மற்றும் பாடனில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி வரை கூட உயரும். பின்னர் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் குறிப்பிட்டது போல சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பொழியக்கூடும். வானிலை அடிக்கடி மாறி மாறி வருவதால் திங்கட்கிழமை வரை குடையுடன் செல்லுவது சிறந்ததாக இருக்கும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.