ஊரி கன்டோனில் போலி அழைப்புகள் : போலீசார் எச்சரிக்கை சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களில், ஊரி கன்டோனல் காவல்துறைக்கு பல புகார்கள் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. புகார் அளித்தவர்கள் காவல்துறை அதிகாரிகளைப் போல் நடிக்கும் தெரியாத அழைப்பாளர்களால் தொடர்பு கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பாளர்கள், குடும்ப உறுப்பினர் ஒருவர் விபத்தில் சிக்கியிருப்பதாகவும், அவசரமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினர். உடனடியாக இவ்வாறான அழைப்புகளை பெற்றவர்கள் சாதூரியமாக செயல்பட்டு ஊரி கன்டோனல் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த மோசடி குறித்து உரி கண்டோனல் போலீசார் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர். இதுபோன்ற”அதிர்ச்சி அழைப்புகளில்”, மோசடி செய்பவர்கள் உங்களைப் பயமுறுத்தும் வகையில் போலியான, ஆனால் நம்பத்தகுந்த கதையைக் கொடுப்பார்கள்.
பொதுவாக ஒரு குடும்ப உறுப்பினர் கடுமையான பிரச்சனையில் அல்லது ஆபத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஒரு வங்கிக் கணக்கிற்கு விரைவாக பணம் அனுப்ப அல்லது கூரியரில் மதிப்புமிக்க பொருட்களை ஒப்படைக்க அவர்கள் உங்களை அழுத்ததத்திற்கு உள்ளாக்குகிறார்கள்.
எனவே இது தொடர்பில் மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு ஊரி கன்டோனல் போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.