ஊரி கன்டோனில் புகலிடகோரிக்கையாளர்களின் விடுதியில் தீ விபத்து இன்று வியாழக்கிழமை கன்டோன் ஊரியில் உள்ள புகலிட கோரிக்கையாளர்களின் குடியிருப்பு ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 9:30 அளவில் இடம்பெற்றுள்ளதாக ஊரி கன்டோனல் காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
குறித்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதோடு 23 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நச்சுப்புகையை சுவாசித்தமையினால் இருவர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தின் காரணமாக சுமார் 43 புகலிட கோரிக்கையாளர்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளதாகவும் அவர்களுக்காக மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 60 தீயணைப்பு படையினர் தீயினை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. ஊரி கன்டோனல் போலீசார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source/Image (c) :- Kantonspolizei Uri